பிரதேச சபை உறுப்பினர் கபூர் செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலத்திற்கு ஆய்வு கூடத்துக்கான மேசை, கதிரைகள் வழங்கி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 23, 2020

பிரதேச சபை உறுப்பினர் கபூர் செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலத்திற்கு ஆய்வு கூடத்துக்கான மேசை, கதிரைகள் வழங்கி வைப்பு

ஓட்டமாவடி நிருபர்

மட./மம/செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான மேசைகளையும் கதிரைகளையும் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் இன்று பாடசாலை அதிபர் எம்.எஸ்.சுபைதீன் அவர்களிடம் வழங்கி வைத்தார்.

மட் /மம /செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் விஞ்ஞான செயற்பாடுகளை செய்வதற்கான பெரிய மேசையின் தேவையும் அதற்கான கதிரைகளையும் வழங்குமாறு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.சுபைதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் அவர்களினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இச்செயற்பாட்டு மேசையின் ஊடாக விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் பிரயோசமடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனது சொந்த நிதியிலிருந்து இம்மேசை கதிரைகளை பெற்றுக் கொடுத்தார். 

எதிர்காலத்தில் இப்பிரதேச ஏழைச்சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகாக மேலும் பல்வேறு சேவைகளை செய்யவுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment