ஜனாதிபதி எதிர்பார்க்கும் விதத்தில் பாதுகாப்பு படைகளை கொண்டு நடத்துவோம் - கடமைகளை பொறுப்பேற்றார் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

ஜனாதிபதி எதிர்பார்க்கும் விதத்தில் பாதுகாப்பு படைகளை கொண்டு நடத்துவோம் - கடமைகளை பொறுப்பேற்றார் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானி

(ஆர்.யசி)

நாட்டையும், மக்களையும் பாதுகாக்கும் உயரிய மட்ட சேவையினை செய்வோம். அதேபோல் ஜனாதிபதி எதிர்பார்க்கும் விதத்தில் பாதுகாப்பு படைகளை கொண்டு நடத்துவோம் என பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக இன்று பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டப வளாகத்தினுள் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தினுள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியாக தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வு முப்படையினரால் கௌரவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, உபகரன மாஸ்டர் ஜெனரல் எம்.எ.எ டி ஶ்ரீநாக, போர்கருவி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்திரசேகர, இராணுவ செயலாளர் நாயகம் பி.ஜே. கமகே மற்றும் முப்படை அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் குறித்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment