அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தார் ராஜித - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தார் ராஜித

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரி தனது சட்டத்தரணியுடாக அவர் இந்த மனுத்தாக்காலை செய்துள்ளார்.

இதேவளை ராஜித சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து நேற்யைதினம் சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்திய விவகாரத்தில் இடம்பெறும் விசாரணைகளில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிவான் பயணத் தடை விதித்திருந்ததுடன், அவரது கடவுச் சீட்டை நீதிமன்றின் பொறுப்பில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment