அனைத்து பாடங்களிலும் அதிதிறமை சித்தியினை பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன் - O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாழ்த்து - News View

About Us

About Us

Breaking

Sunday, December 1, 2019

அனைத்து பாடங்களிலும் அதிதிறமை சித்தியினை பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன் - O/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாழ்த்து

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று க.பொ.த. உயர்தரத்திற்கு சித்தியடைய தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக். 

அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாளை 2019.12.02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையானது ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டமாகும். மேலும் இப்பரீட்சையானது மாணவர்களுக்கு மாத்திரமன்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அவர்கள் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்குமான ஒரு முக்கிய தருணமாக அமையவுள்ளது.

உண்மையில் அவர்களுடைய வாழ்க்கையிலேயே கடக்க இருக்கின்ற முதலாவது தடை இதுவாகும். இதில் அவர்கள் பூரணமாக வெற்றி பெற்று எதிர்காலத்தில் உயர் தரக் கல்வியினை தொடர்வதனூடாக குறிப்பாக இலங்கையில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் பிரயோசனம் உள்ள நற்பிரஜைகளாக மாறுவதற்கும், உயர்ந்த பதவிகளைப் பெற்று நாட்டுக்கும் சேவை செய்வதனூடாக நாட்டினுடைய இறைமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் சுபீட்சம், ஒற்றுமைக்காக பாடுபடுகின்ற சமூகமாக மாற வேண்டும்.

மேலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தங்களது எதிர்காலம் தொடர்பாக பல்வேறு வகையான திட்டமிடல்கள் உள்ள போதிலும் இப்பரீட்சைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அனைத்து பாடங்களிலும் அதிதிறமை சித்தியினை பெறுவதனை மையமாகக்கொண்டு செயற்பட வேண்டும்.

எனவே நாளை நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையினை எவ்வித பதட்டமுமின்றி மிகவும் நிதானமான முறையில் எதிர்கொண்டு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதனூடாக எமது சமூகம் எதிர்கால கல்விச் சமூகமாக மாற்றமடைய பிராத்திக்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment