(எச்.எம்.எம்.பர்ஸான்)
சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட அறபா நகர் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதானால் தியாவட்டவான் 210 சீ வட்டராத்தில் அமைந்துள்ள அறபா நகர் கிராமத்துக்கான பிரதான வீதியால் பொதுமக்கள் போக்குவரத்து செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.
குறித்த வீதியில் வெள்ளநீர் தேங்கி நின்றதனால் அக்கிராம மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பாரிய தடைகளை எதிர்நோக்கினர். இதனை கருத்திற்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அசீசுல் றஹீம் ஆசிரியர் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து உரிய இடத்திற்கு நேரடியாக வருகைதந்து பார்வையிட்ட தவிசாளர் சபை ஊழியர்களுக்கு உடனடியாக நீரை வழிந்தோடச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார்.
குறித்த வெள்ளநீரை வெளியேற்ற ஜே.சீ.பீ.இயந்திரத்தின் உதவியுடன் நீர் வழிந்தோடுவதற்கான நடவடிக்கைகள் நேற்று (4) மேற்கொள்ளப்பட்டு தற்போது பொதுமக்கள் பயணம் செய்யுமளவுக்கு வீதியில் காணப்பட்ட வெள்ளநீர் அப்புறப்படுத்தப்பட்டது.
இதற்கான தீர்வினைப் பெற்றுத்தந்த தவிசாளருக்கும், களத்தில் நின்று செயற்பட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.ஏ.அஸ்ரப் ஹுசைன் மற்றும் அல்பத்தாஹ், ஹிப்ஜாத் ஆகியோர்களுக்கு பிரதேசசபை உறுப்பினர் ஏ.ஜீ.அசீசுல் றஹீம் ஆசிரியர் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment