இறைத் தூதரின் கேலிச்சித்திரப் போட்டியை மீண்டும் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார் டச்சு எம்.பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

இறைத் தூதரின் கேலிச்சித்திரப் போட்டியை மீண்டும் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார் டச்சு எம்.பி

நெதர்லாந்தின் இஸ்லாமிய எதிர்ப்பு பாராளுமன்ற உறுப்பினரான கீர்ட் வில்டர், முஹமது நபி தொடர்பான கேலிச்சித்திரப் போட்டியை மீண்டும் நடத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தாக்குதல் அச்சம் காரணமாக ஓர் ஆண்டுக்கு முன் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை வெளிட்ட ட்விட்டரில், முஹமது கேலிச் சித்திரங்களை அனுப்பும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

“வன்முறை மற்றும் இஸ்லாமிய பத்வாவை தாண்டி கருத்துச் சுதந்திரம் மேலோங்க வேண்டும்” என்று டச்சு நாட்டின் பிரதான எதிர்க் கட்சித் தலைவரான அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இவ்வாறான திட்டம் ஒன்றை வில்லர்ட் அறிவித்தபோதும், கொலை அச்சுறுத்தல் காரணமாக அந்தத் திட்டத்தை அவர் கைவிட்டிருந்தார்.

அப்போது இதற்கு எதிராக பாகிஸ்தானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு, இஸ்லாமிய நாடுகள் நெதர்லாந்துடனான உறவுகளை துண்டிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இஸ்லாமிய பாரம்பரியத்தில் இறைத் தூதரின் படங்கள் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கேலிச் சித்திரங்கள் இஸ்லாமிய உலகில் கடும் கோபத்தை தூண்டும் ஒன்றாக உள்ளது.

No comments:

Post a Comment