மரபணு திருத்தப்பட்ட குழந்தை : விஞ்ஞானிக்கு 3 ஆண்டு சிறை - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 31, 2019

மரபணு திருத்தப்பட்ட குழந்தை : விஞ்ஞானிக்கு 3 ஆண்டு சிறை

உலகில் முதலாவது மரபணு திருத்தப்பட்ட குழந்தையை உருவாக்கியதாக அறிவித்த சீன நாட்டு விஞ்ஞானியான ஹி ஜியன்குய்யிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் தடையை மீறி எயிட்ஸ் நோயில் இருந்து பாதுகாக்கும் முயற்சியாக மனித கருக்களை தனது சொந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியதாக அந்த விஞ்ஞானி குற்றம் காணப்பட்டுள்ளார்.

இந்த ஆய்வு தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டதை அடுத்து அதற்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியானது. இந்த ஆராச்சி மூலம் கடந்த ஆண்டு நவம்பரில் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்டது.

இதே நேரம் முன்னர் உறுதி செய்யப்படாத மூன்றாவது குழந்தையும் இந்த ஆராய்ச்சி மூலம் பிறந்திருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இந்தக் குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக குவாங்டொங் மாகாண உள்ளூர் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்தரித்த முட்டையின் மரபணுக்களில் சில மாற்றங்களை செய்வதையே மரபணு திருத்தம் என அழைக்கப்படுகிறது. இதனை மனிதத் தன்மையற்ற பயங்கர செயல் என விஞ்ஞானிகள் சிலர் சாடியுள்ளனர்.

No comments:

Post a Comment