தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 3, 2019

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் பற்றாக்குறை தொடர்பில் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

அதிபர் குறைபாடு நிலவும் பாடசாலைகள், அதிபர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கி இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பித்துள்ளவர்களின் தகுதிகளின் அடிப்படையில் அவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் கூறினார்.

அடுத்த மாத நிறைவிற்குள் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே அதிபர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அனுமதியை பொதுச்சேவை ஆணைக்குழு வழங்காமையால் நியமனங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் குறித்த விண்ணப்பங்களை மீள் பரிசீலனை செய்வதற்கும் அவர்களை நேர்முகத் தேர்விற்கு அழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

274 தேசிய பாடசாலைகளில் தற்போது அதிபர் பதவிக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment