ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிரிகொத்தவில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் கட்சியின் தலைமைத்துவம் என்பன குறித்து கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக கட்சிக்குள் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
குறிப்பாக எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாஸவினை நியமிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் இதற்கு கட்சியின் தலைமை தொடர்ந்தும் பின்னடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment