அச்சம் நிறைந்த யுகத்தை நோக்கி மீண்டும் பயணிக்கின்றோமா? - மங்கள கேள்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 11, 2019

அச்சம் நிறைந்த யுகத்தை நோக்கி மீண்டும் பயணிக்கின்றோமா? - மங்கள கேள்வி

(நா.தனுஜா)
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கடினமான சுமார் ஒரு மாத காலம் கடந்திருக்கும் நிலையில் ஒரு கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான சுவிட்ஸர்லாந்து தூதரக ஊழியர் தற்போது நகைப்பிற்கிடமான வகையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார்.

நாம் மீண்டும் அச்சமும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் கொண்ட பள்ளத்தை நோக்கிப் பயணிக்கின்றோமா? என்று பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவொன்றைச் செய்திருக்கிறார். அப்பதிவிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மங்கள சமரவீரவின் முழுமையான டுவிட்டர் பதவி வருமாறு:

'ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கடினமான சுமார் ஒரு மாத காலம் கடந்திருக்கும் நிலையில், கோத்தாபய ராஜபக்ஷவின் நெறிமுறைகள் செயற்பட ஆரம்பித்திருக்கின்றன.

ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் மிகமோசமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று ஒரு கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான சுவிட்ஸர்லாந்து தூதரக ஊழியர் தற்போது நகைப்பிற்கிடமான வகையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார். மீண்டும் அச்சமும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் உள்ள பள்ளமொன்றை நோக்கிச் செல்கின்றோமா?'. இவ்வாறு அப்பதிவில் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியிருக்கிறார்.

No comments:

Post a Comment