பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிக்காக இம்முறையும் வவுச்சர் வழங்கப்படும். எனினும் அவசரமாக சீருடைகளை கொள்வனவு செய்ய முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இம்முறையும் சீருடை பெற வவுச்சர் வழங்கப்படும். உயர்தர மாணவர்களுக்கு வழங்கும் வவுச்சரின் பெறுமதியை அதிகரிப்பதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
வவுச்சர் வழங்குமாறும் சீருடைதுணி வழங்குமாறும் வேறுபட்ட கருத்து உள்ள போதும் சிறந்த முறையை அரசாங்கம் முன்னெடுக்கும். திடீரென சீருடை துணி தருவிக்க முடியாது. எனவே தற்போதுள்ள முறையை தொடர முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment