சர்வதேச தனியார் பாடசாலைகளை கண்காணிக்க கல்வி அமைச்சு தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2019

சர்வதேச தனியார் பாடசாலைகளை கண்காணிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

சர்வதேச தனியார் பாடசாலைகளை கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது எந்தவொரு சர்வதேச தனியார் பாடசாலையும் கல்வி அமைச்சின் கீழ் இல்லை என அமைச்சின் மேலதிக செயலாளர் R.M.M. ரத்நாயக்க தெரிவித்தார்.

இதனால் சர்வதேச தனியார் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் முறைமைகள், மாணவர்களுக்கான ஒழுக்க விதிமுறைகள் தொடர்பில் கண்காணிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சில சர்வதேச தனியார் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனங்களில் குறைபாடுகள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் R.M.M. ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இதற்கு தீர்வு வழங்கும் நோக்கில், சர்வதேச தனியார் பாடசாலைகளை கண்காணிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment