உத்தியோகப்பூர்வ வாகனங்கள், இல்லங்களை திருப்பி வழங்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 3, 2019

உத்தியோகப்பூர்வ வாகனங்கள், இல்லங்களை திருப்பி வழங்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவிப்பு

தமது உத்தியோகப்பூர்வ இல்லங்கள் மற்றும் வாகனங்களை இதுவரை திருப்பி வழங்காத முன்னாள் அமைச்சர்கள் அவற்றை விரைவாக திருப்பி வழங்குமாறு கடிதம் மூலம் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சுகளுக்கான செயலாளர்களினது வீடுகளையும் வாகனங்களையும் திருப்பி கையளிக்க முன்னாள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் தாமதமாகும் பட்சத்தில் தற்போதைய அமைச்சர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார்.

புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லங்களையும் வாகனங்களையும் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment