பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளிக்கு பணிப்புரை - News View

About Us

About Us

Breaking

Monday, December 2, 2019

பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அதிகாரிகளிக்கு பணிப்புரை

சீரற்ற வானிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிந்து விழுதல் போன்ற அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன ஒன்றிணைந்து அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான சூழலை ஏற்படுத்தவும் பொதுமக்களுக்கான நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வனைத்து செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மீளாய்வு ஆகியன கௌரவ பிரதமரின் தலைமையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment