எனது தன் நம்பிக்கையும், விடா முயற்சியும் என்னிடம் இருந்தாலும் தந்தை மற்றும் தாய் உறவுகளுடன் வழிகாட்டிய அதிபர், ஆசான்கள் மற்றும் இறைவனிடம் வேண்டிய துஆப் பிரார்த்தனையும் எனக்கு கிடைத்ததே இப்பெறுபேற்றிக்கான காரணம் என கூறுகிறார். க.பொ.த உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 2ஏ, பி சித்தியைப் பெற்று திருமலை மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்ற மூதூர் மீராசா பாத்திமா முஸாதிகா தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் திருகோணமலை ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற முஸாதிகா ஆரம்பக் கல்வியை 01 தொடக்கம் 07 வரை மூதூர் இமாம் சாபி வித்தியாலயத்திலும், 07 தொடக்கம் 11 வரை மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்திலும் பயின்று திருமலை ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான் பிரிவில் உயர் தரம் பயின்றேன்.
தினசரி பாடசாலையிலும், வீட்டிலும் பாடசாலையில் கற்பிக்கும் பாடங்களை மீளப்படிப்பேன். கடந்த கால வினாப் பயிற்சிகள் மற்றும் மாதிரிப் பரீட்சைகளை மீள கற்பதில் அதிகூடிய கவனம் செலுத்தினேன். இதற்காக எனது முயற்சியுடன் ஆசான்களின் வழிகாட்டல் கிடைத்தது.
எனது தந்தை செங்கல் உற்பத்தி செய்யும் ஒரு தொழிலாளியாக இருந்தும் தந்தையும், தாயும் என்னை ஊக்கிவித்தமையும் ஆரம்ப முன்பள்ளி முதல் உயர்தரம் வரை கற்பித்து தந்த அதிபர், ஆசான்களையும் நான் என்றும் மறவேன்.
எனது வருங்கால இலட்சியமாக கொள்வதற்கும் எனது பல்கலைக்கழக கல்வியை தொடராக மேற்கொள்வதற்கும் தேவையான மேலதிக வசதிகள் எனக்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
மேலும் இதற்கான வழிகாட்டல்களை, உதவிகளை வழங்குவதாகவும் கல்விமான்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் ஊர் பிரமுகவர்கள் என் மீது அன்பு காட்டுவது தன்னை மேலும் ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கின்றார்.
அதேவேளை ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணராக (VOG) ஆக ஆசைப்படுகின்றேன். இதன் மூலமாக இந்நாட்டில் வாழும் சகல இன மூவின சமூகத்திற்கும், இம்மாவட்டத்திற்கும், ஊருக்கும் இப்பணியை சிறப்பாக செய்ய எல்லாம் வல்ல இறைவன் உதவ வேண்டும் என்றார்.
திருமலை ஸாஹிரா மகா வித்தியாலய அதிபர் ஏ.எஸ். அலி சப்ரி கருத்து தெரிவிக்கையில், ஒழுக்கத்திலும், கற்றலிலும் முன்மாதிரியான இம்மாணவியின் அர்ப்பணிப்புடனான கற்றல் இம்மாவட்டத்தில் சாதனை மாணவியாக முதல் நிலை கிடைத்திருப்பது பாடசாலைக்கும், சமூகத்திற்கும், மாவட்டத்திற்கும், நாட்டுக்கும் பயனுறுதியுடைய மகிழ்ச்சியான பெறுபேற்று வெற்றியாகும் என்றார்.
(மூதூர் நிருபர் - எஸ். கஸ்ஸாலி)
No comments:
Post a Comment