19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.தே.க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அதனை முற்றாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது எனவும் எனினும் அதிலுள்ள பிரிவுகளை இணைந்து திருத்தம் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் 19 ஆவது திருத்தத்தை நீக்குவதாக ஜனாதிபதி இந்தியாவில் கூறியிருந்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், 19 ஆவது திருத்தத்தின் காரணமாக நாட்டை ஆட்சி செய்வது கடினமாக இருப்பதாக தற்போதைய அரசாங்கம் கூறியுள்ளது. இந்த சட்டத்தை நாம் தனியாக கொண்டுவரவில்லை.
முழுநாள் விவாதம் நடத்தி ஒவ்வொரு சரத்தாக ஆராய்ந்தே இதனை நிறைவேற்றினோம். இதனூடாக அரச நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்பட வாய்ப்பளிக்கப்பட்டது. அரசியல் தலையீடுகள் இன்றி அவை செயற்பட்டன.
19 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய ஆதரவு வழங்குவதாக எமக்கு ஒரேயடியாக கூறிவிட முடியாது. பேச்சுவார்த்தை நடத்தி சில சரத்துகளை நீக்க நாம் தயார். கட்சி ரீதியில் பேசி முடிவெடுத்த பின்னர் அரசாங்கத்துடன் பேச முடியும் என்றார்.
No comments:
Post a Comment