ஜனவரி 2ஆம் திகதி முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் அன்றைய தினமே மாணவர்களுக்கான பாடநூல்களை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இறுதி மாதத்தில் மூன்றாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்படும்போதே பாடநூல்களை வழங்குவதற்குத் தீர்மானித்திருந்த போதும் சில நூல்கள் குறைபாடுகளாக இருந்தமையால், அடுத்துவரும் பாடசாலை முதல் நாளிலிலேயே அதனை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க ஜனவரி 02ஆம் திகதி பாடநூல்களைப் பெற்றுக்கொடுப்பதாகவும் அதற்கான பணிப்புரைகளை வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் வழங்கியுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
பாடநூல்கள் தொடர்பில் ஏதாவது விபரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் 011 2784815 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment