(எம்.பஹ்த் ஜுனைட்)
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் தொடரும் மழை வீழ்ச்சியின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி,பாலமுனை, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கல்முனை போன்ற பிரதேசங்களில் உள்ள மீணவர்களின் வாழ்வதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு வார காலமாக கடல் கொந்தளிப்பபாகவும் ,கடலில் அதிக காற்று வீசுவதாலும் கடலுக்குச் செல்வது ஆபத்து என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்திருப்பதால் மீணவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடல் மீன்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றன.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் மற்றும் வீதிகள் உள்ளிட்ட பல இடங்கள் மழை நீர் வெள்ளத்தில் மூழ்கிக்காணப்படுகிறது. தாழ்நிலை பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment