கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கழுதையின் சடலம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

கால்கள் வெட்டப்பட்ட நிலையில் கழுதையின் சடலம்

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, மாந்தை சந்தியில் உள்ள சேமக்காலைக்கு அருகில் நான்கு கால்களும் வெட்டப்பட்ட நிலையில் கழுதை ஒன்றின் உடல் நேற்று திங்கட்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.

அப்பகுதியூடாக பயணித்த மக்கள் கழுதை ஒன்றின் நான்கு கால்களும் முழுமையாக வெட்டப்பட்ட நிலையில் காணப்படுவதை கண்ட நிலையில் தனக்கு தெரியப்படுத்தியதாக குறிபிட்டார்.

குறித்த கழுதை மாட்டு இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர். 

இது தொடர்பாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.எம். கில்றோய் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மன்னார் நிருபர்

No comments:

Post a Comment