அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறந்து வளர்ந்த நியூயோர்க் நகரில் இருந்து புளோரிடா மாநிலத்திற்கு தனது இல்லத்தை மாற்றியுள்ளார்.
நியூயோர்க் நகரின் மான்ஹாட்டன் பகுதியில் டிரம்ப் டவர்ஸ் என்ற கட்டிடம் உள்ளது. 1980ஆம் ஆண்டு முதல் டிரம்ப் அங்கு வசித்து வந்தார். ஜனாதிபதியாக தெரிவான பிறகு வெள்ளை மாளிகைக்கு சென்றார்.
ஆனால், நியூயோர்க் நகரில் உள்ள டிரம்ப் டவர்ஸ்ஸில் தான் வசித்த இடத்தை தனது முதன்மை இல்லமாக கொண்டிருந்தார். இந்நிலையில், நியூயோர்க் நகரிலிருந்து புளோரிடா மாநிலத்தில் உள்ள மர்-அ-லாகோ பகுதிக்கு தனது குடியிருப்பை மாற்றியுள்ளார்.
'நான் பிறந்து வளர்ந்த நியூயோர்க் நகரை மிகவும் நேசிக்கிறேன். இந்த நகர மக்களையும் கூட. மாநிலம் மற்றும் நகராட்சிக்கும் இலட்சக்கணக்கான டொலர்கள் அளவில் வரி செலுத்துகிறேன். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக சில அரசியல் தலைவர்களால் நான் மோசமாக நடத்தப்படுகிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையில் மர்-அ-லாகோ பகுதியில் உள்ள 1100, சவுத் ஓசியன் பொலிவார்ட் என்ற முகவரியில் அமைந்துள்ள சொகுசுப்பங்களா இனி ஜனாதிபதி டிரம்பின் புதிய குடியிருப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment