மல்வானை ஆரம்ப பிரிவு மாணவி மரியம் தேசிய மட்டத்தில் சாதனை - News View

About Us

About Us

Breaking

Friday, November 1, 2019

மல்வானை ஆரம்ப பிரிவு மாணவி மரியம் தேசிய மட்டத்தில் சாதனை

2013 ஆம் ஆண்டு தனியாக மாகாண பாடசாலையாக பிரிக்கப்பட்டு 7 ஆண்டுகளில் ஒன்றன் பின் ஒன்றாக தொடராக வெற்றி நடைபோடும் மே/மா/கள அல்முபாரக் கனிஷ்ட வித்தியாலயம் - மல்வானை இவ்வருடமும் அதனது சிறந்த நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழாத்தின் அயராத அர்ப்பணம் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஒத்துழைப்பு காரணமாக இன்னொரு காத்திரமான மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2019 ஆம் கல்வியாண்டில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட மீலாத் போட்டியில் ஆரம்ப பிரிவு பேச்சு போட்டி தமிழ் மொழிப் பிரிவில் பிரபல எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீன் - பாத்திமா நஸ்மியா தம்பதியின் செல்வப் புதல்வி செல்வி பாத்திமா மர்யம் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுக்கொடுத்து பாடசாலைக்கும் ஊருக்கும் நிலையான பெருமையை புகழை தேடித்தந்தந்துள்ளார். 

இவர் கடந்த வாரம் வெளியாகிய ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததும் குறிப்பிடத்தக்கதோடு அல் முபாரக் ஆரம்ப பிரிவில் முதல் தடவையாக மேல் மகாணத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியாக 2ஆம் இடத்தையும் பெற்றுக் கொடுத்த சாதனை மாணவர் இவராவர். 

No comments:

Post a Comment