எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி திட்டமிட்டப்படி போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், “அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நான் எதிர்வரும் 6ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள போராட்டம் குறித்து பல சிங்கள அமைப்புக்கள் தேர்தல் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளன.
அதாவது, இது தேர்தலை மீறும் செயல் என முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விடயம் குறித்து நான் ஆணைக்குழுவிடம் விளக்கமளிக்குமாறு கோரினேன்.
அதற்கமைய 10 பேருக்கும் குறைவான நபர்களுடன் போராட்டத்தை முன்னெடுக்க முடியுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எனவே 10 பேருக்கும் குறைவான நபர்களுடன் குறிப்பிட்ட திகதியில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயலகங்களுக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பேன்” என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment