அனைவரின் ஒத்துழைப்பையும் இன்றைய தினத்தில் எதிர்பார்ப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் 40 வீதம் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 9ஆம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள், அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment