எமது அரசாங்கத்தில் மக்கள் காணாமற் போகின்றார்களா? ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றார்களா? நீதிபதிகளை விரட்டுகின்றார்களா? துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகின்றதா? - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

எமது அரசாங்கத்தில் மக்கள் காணாமற் போகின்றார்களா? ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றார்களா? நீதிபதிகளை விரட்டுகின்றார்களா? துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகின்றதா?

குறைகள் இருந்தாலும் தற்போது இலங்கையில் கண்ணியமான அரசாங்கமொன்று உள்ளதாகவும் அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அது தொடர்பில் குடிமக்கள் மகிழ்ச்சியடையலாம் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டி பேராதனையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து ​பேசிய அவர், “மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சர்வதேச பிரச்சினைகள் வந்தன. அன்று அவர்களுக்கு இருந்த முக்கிய குற்றச்சாட்டுகள் தான் எமக்கும் இருந்தன. அக்காலத்தில் அரசாங்கம் கொலை செய்தது, ஊடகவியலாளர்களை தாக்கியது, ஊடக நிறுவனங்களை கொளுத்தியது, நீதிபதிகளை விரட்டியதோடு தொழிற்சங்க தலைவர்களுக்கு தொல்லைகள் அளித்தார்கள். 

அரசாங்கம் இதற்கு பின்னால் உள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பிடமிருந்து குற்றச்சாட்டுகள் வந்தன. எந்தவொரு நாட்டிலும் கொலைகள் நடக்கத்தான் செய்யும் அதனை தடுக்க முடியது. ஆனால் அரசாங்கம் கொலை செய்ய முடியாது.

“அரசாங்கமொன்று ஊடகவியலாளர்களை தொழிற்சங்க தலைவர்களை துன்புறுத்த முடியாது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இதனை நிறுத்துமாறு கூறினோம். அவர்கள் அதனை நிறுத்தவில்லை. அதனால்தான் இரண்டு வருடம் இருக்கும் போதே தேர்தலை நடத்தினார். அவ்வாறு இரண்டு வருடங்களுக்கு முன்னரே யார் தேர்தலுக்கு செல்வார்கள்? 

அவர் 2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு சென்றிராவிட்டால் எமது நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பொருளாதார தடையை விதித்திருக்கும். எமது பொருட்களை ஏற்றுமதி செய்யமுடியாது. எமக்கு பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது. அந்நிலைமைக்கு முகங்கொடுக்க முடியாமல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தேர்தலை நடத்தினார். 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி ஜனாதிபதி பதவியை விட்டுச் செல்ல யார் விரும்புவார்கள்? தேர்தலின் பின்னர் எமது அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. இன்று எமது நாட்டில் மக்கள் காணாமற் போகின்றார்களா? ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றார்களா? நீதிபதிகளை விரட்டுகின்றார்களா? தண்ணீர் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுகின்றதா? 

இன்று பூரண சுதந்திரமுண்டு. ஊடகங்கள் இன்று எம்மையே ஏசுகின்றன. சில ஊடகங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அமையவே நடந்து கொள்கின்றன. நாட்டைப் பற்றி எண்ணுவதில்லை. 

“இன்று என்ன குறைகள் இருந்தாலும் எமது நாட்டில் கண்ணியமான அரசாங்கமொன்றுள்ளது. எம்மால் தவறுகள் இழைக்கப்பட்டன. அதை நாம் இல்லை என்று கூறவில்லை. இன்று சட்டம் அனைவருக்கும் பொதுவாகவுள்ளது. எமது பிரதமரை ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகக் கூறினார்கள். அவர் சென்றார்.

அந்த காலத்தில் அது முடியுமா? நாம் நீதிமன்றத்தை சுயாதீனமாக்கியுள்ளோம். இன்று எந்தவொரு அரசியல் சக்திக்கும் நீதிமன்றததை அடிபணிய வைக்க முடியாது. நாம் 19 வது திருத்த சட்டமூலம் நீதிமன்றத்தை சுயாதீனமாக்கியுள்ளோம். 

இன்று ஜனாதிபதி விரும்பியவாறு நீதிபதிகளை நியமிக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அவரே அனைத்து நியமனங்களையும் வழங்கினார். 

அரசியலமைப்பு சபையின் சபாநாயகர்தான் தலைவர். அதில் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் உள்ளார்கள். அறிவாளிகள் உள்ளார்கள் சபை அனுமதி வழங்கினால்தான் நியமனங்கள் வழங்க முடியும். 

அன்று ஜனாதிபதி ஒரு பெயரை அனுப்பினால் அரசியலமைப்பு சபைக்கு நிராகரிக்க அதிகாரம் இருக்கவில்லை. ஆனால் இன்று அரசியலமைப்பு சபைக்கு நிராகரிக்க அதிகாரமுள்ளது.

“நாம் எல்லாவற்றையும் செய்தோம் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் எமக்கு பாதி அரசாங்கமே கிடைத்தது. நாம் 2015 ஆம் ஆண்டு வெற்றி பெற்றாலும் நாம் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வேலை செய்தவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தலில் தோற்றவர்களை பாராளுமன்றத்துக்கு நியமித்தார்கள். அமைச்சரவைக்கும் அவர்களை கொண்டு வந்தார்கள்.

அவர்கள் என்ன செய்தார்கள்? எந்நாளும் காலால் இழுத்தார்கள். இந்த சிரமங்களுக்கு மத்தியில் நாம் சில வேலைகளை செய்தோம். எமது அரசாங்கத்தையே கொள்ளையடித்தார்கள். ஆனால் நம் அதனை மீளவும் பெற்று கொண்டோம் என்றார்.

No comments:

Post a Comment