அநேகமான நாடுகளில் அறிவை முதன்மையாகக் கொண்ட பொருளாதாரமே காணப்படுவதாகவும் இந்நாட்டு இளைஞர்களின் பங்களிப்பை பெற்று அவ்வாறான பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதால் அதற்காக உயர் கல்வியின் மூலம் இளைஞர் சமுதாயத்தை வலுவாக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கந்தளாய் பாதியகம மைதானத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு இடமளிக்கவில்லை. நாம் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு பிரிவினருக்கு பயிற்சியளித்து புலனாய்வு பிரிவு அதிகாரிகளை நியமித்தோம். இந்த அரசாங்கம் அதனை மாற்றியது. அதனால் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கியது.
அன்றைய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கே.பீ.யை கூட இலங்கைக்கு அழைத்துவர முடிந்தது. வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அனைத்து தகவல்களும் அளிக்கப்பட்டிருந்த வேளையிலும் அதனை அரசால் தடுக்க முடியாமற் போனது.
அதேபோல் அன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி வேலை திட்டங்களினால் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டது. நாம் நல்ல முதலீடுகளை செய்தோம்.
ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டது. அதனுடன் இணைந்த 4 இலட்சம் வேலைவாய்ப்புகளும் இல்லாமற் போயின. அன்று மஹிந்த ராஜபக்ஷவை ஏளனப்படுத்த மத்தல விமான நிலையத்தை நெற் களஞ்சியசாலையாக மாற்றினார்கள். நாம் எமது கொள்கைகளை முன்வைத்துள்ளோம்.
திட்டங்களை அறிவித்துள்ளோம். விசேடமாக நாம் நமது கொள்கையில் விவசாயத்துக்கு பாரிய இடத்தை அளித்துள்ளோம். நாட்டை அரிசியினால் தன்னிறைவு செய்ய வேண்டும். விவசாயியை பாதுகாக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். நாம் உரமானியம் வழங்குவோம். விவசாயிகளின் கடனை இரத்துச் செய்வோம்.
விவசாய காப்புறுதி முறையொன்றை, ஓய்வூதிய முறையொன்றை முன்வைத்துள்ளோம். நெற் பயிர்ச் செய்கை மாத்திரமல்ல விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு தேசிய விவசாயம் குறித்த புரிந்துணர்வு இல்லை.
நாம் சிறப்பான கொள்கைகள் மூலம் விவசாயத்தை விஞ்ஞான தொழில்நுட்பத்தை உபயோகித்து நீர் முகாமைத்தும், உர முகாமைத்துவம், விதைக்கான அரச தலையீட்டுடனான திட்டமொன்றை முன்வைத்துள்ளோம். நாம் விவசாயியை தொழில் முனைவோனாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.
No comments:
Post a Comment