25,000 கிலோ கிராம் கழிவுத் தேயிலையுடன் விசேட அதிரடிப் படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (01) உஸ்வெட்டகெய்யாவ தொழிற்சாலையிலிருந்து கழிவுத் தேயிலையுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் குறித்த தொழிற்சாலை முகாமையாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் குறித்த கழிவுத் தேயிலையை ஏற்றுமதி செய்யத் தயாராகவிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்டுள்ள கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர்கள் மூவரும் வத்தளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment