தெஹிவளை, கடற்கரையோரமாகவுள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு விருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்த 100 பேர் பல்வேறு போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (02) இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் மூலம் ஒன்றுகூடிய 17 பெண்கள் மற்றும் 83 ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கேரள கஞ்சா (4 கிராம்), பியர் (38.5 லீற்றர்), போதை முத்திரை (01) உள்ளிட்ட சட்டவிரோத போதை மாத்திரைகள் (28) உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 தொடக்கம் 48 வயதுடைய, அம்பலாந்தோட்டை, களுத்துறை, குருணாகல், பொலன்னறுவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்றையதினம் (03) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment