மட்டு. மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 100 டெங்கு நோயாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, November 29, 2019

மட்டு. மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 100 டெங்கு நோயாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. கடந்த நவம்பர் 15ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையும் 100 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து இதுவரை 1519 பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். 

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அது போன்று ஆரையம்பதியில் 14 பேர் களுவாஞ்சி குடியில் 07 பேர் செங்கலடி, வவுனதீவு ஆகியவற்றில் தலா 10 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்.

மொத்தமாக கடந்த வாரம் 100 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே. குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

No comments:

Post a Comment