சஜித் பிரேமதாச தெரிவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு அதிகாரபூர்வமாக அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

சஜித் பிரேமதாச தெரிவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு அதிகாரபூர்வமாக அங்கீகாரம்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் தெரிவுக்கு, இன்று காலை கொழும்பில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சு கேட்போர் கூடத்தில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு ஏகமனதாக அங்கீகாரத்தை வழங்கியது.

மேலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டிய விவகாரங்கள் தொடர்பிலும், சஜித் பிரேமதாசவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய உடன்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் பிரதித் தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன், எம்பீக்கள் வேலு குமார், அரவிந்த குமார், பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், பிரதிச் செயலாளர் சண் பிரபாகரன், அந்தனி லோரன்ஸ், கே.டி. குருசாமி, சிறிதரன், சரஸ்வதி சிவா, உதயகுமார், புத்திர சிகாமணி, அனுஷா சந்திரசேகரன், விஜயசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment