குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் 200,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி இயக்குபவரை திட்டி அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (01) முற்பகல் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CID இற்கு வந்தபோது, கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவான் குணசேகர தெரிவித்தார்.
No comments:
Post a Comment