பயனாளிகளாகப் பேணப்பட வேண்டிய வயோதிபர்கள் - அக்டோபர் 01 சர்வதேச முதியோர் தினம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

பயனாளிகளாகப் பேணப்பட வேண்டிய வயோதிபர்கள் - அக்டோபர் 01 சர்வதேச முதியோர் தினம்

வாழ்வதற்கு வசதி இல்லாத வயதானவர்கள் இன்று மக்கள் தொகையில் கணிசமானவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய இளையவர்களின் சமூக அமைப்பிற்கு தாங்கள் பொருத்தமற்றவர்களாக இருக்கின்றோமா? என்று குறுகுறுத்துக் கொள்ளும் வயதானவர்கள் மனித இனத்தில் பச்சாபாதத்தை தூண்டுகின்றனர்.

எண்ணற்ற முதியோர்கள் ஒவ்வொரு நாட்டிலும் தங்களை சமூகம் என்றுமே எண்ணிப்பார்ப்பதில்லை என்று பெருமூச்சு விடுகின்றனர்.

வயதானவர்களும் சமூக வாழ்விற்கு தங்கள் பங்கினை செலுத்தக்கூடும் என்று அறிந்திராத ஒரு சமூக அமைப்பாக இன்று நாம் வாழ்கின்றோம்.

வயது மெய்நிலை உண்டாக்கும் என்ற முது மொழிக்கு ஏற்ப நீண்ட வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் சமூகத்திற்கு தேவை.

பொதுவாக கூறுவார்கள் வாலிபர்கள் போருக்கும், வயதானவர்கள் புத்திமதி கூறவும் என்பதில் இருந்து சமூகத்திற்கு வயதின் பங்கை அறிந்து கொள்ள முடியும்.

வயதானவர்கள் சமுதாயத்திலும், நாட்டிலும், இல்லத்திலும் செய்யக்கூடிய பலன் உள்ள ஆற்றல்களை மதங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் மிக அழகாக எமக்கு எடுத்தியம்புவதுடன் அவர்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றியும் அவை கூறுவதில் பின்னிற்கவில்லை.

எனவே சர்வதேச தினங்களில் மாத்திரம் அவர்களை போற்றி புகழ்வதை விடுத்து எல்லா தினங்களும் அவர்களுக்கு அகமகிழ வசதியளிப்போம்.

ஏ. ஹனீபா
இளைஞர் சேவை உத்தியோகத்தர்

No comments:

Post a Comment