முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கை நாளாந்தம் விசாரிக்க உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 1, 2019

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கை நாளாந்தம் விசாரிக்க உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு எதிராக நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட 2010 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 30 கோடியே 62 இலட்சத்திற்கும் அதிக நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திமை, நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, சஜின் டி வாஸ் குணவர்தனவிற்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் சாட்சியாளர்கள் ஐவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment