அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கத்தினர் நேற்று ஆரம்பிக்கவிருந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அமைச்சின் செயலாளரது வேண்டுகோளுக்கிணங்க தற்காலிகமாக கைவிட்டனர்.
சுகாதார சேவைகள் சங்கம் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் நாளையும் நாடு முழுவதும் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்கத் தயாராகினர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு அன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 84 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் ஊழியர்கள் கலந்துகொள்ளவிருந்ததாகவும் சங்கத்தின் பேச்சாளர் மஹிந்த குருகே தெரிவித்தார்.
சுகாதார சேவைகளில் கடந்த 2018 இல் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதற்குரிய பலன் கிடைக்காததையடுத்து கடந்த 10 ஆம் திகதி சுமார் 50 ஆயிரம் ஊழியர்கள் நாடுதழுவிய போராட்டத்தில் கலந்து கொண்டோம்.
அதன் தொடர்ச்சியாக மீண்டுமொரு போராட்டத்தை ஆரம்பிக்கவிருந்த நிலையிலேயெ அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அத்தீர்மானத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment