வாக்களித்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

வாக்களித்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களித்த பின்னர் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான வாக்காளர்கள், வாக்களிப்பு நிலையத்திற்கு பொறுப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு தேர்தல் சட்டத்தின் பிரகாரம், மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment