தனியார் துறையினர் வாக்களிப்பதற்கான விடுமுறை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 31, 2019

தனியார் துறையினர் வாக்களிப்பதற்கான விடுமுறை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்களிப்பதற்கான தனியார் துறையில் தொழில்புருவோருக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் கையொப்பத்துடன், இந்த ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

தொழில்புரியும் இடத்திலிருந்து 40 கிலோ மீற்றர் அல்லது அதற்கு குறைவான தூரத்தில் வசிக்கும் சேவையாளர்களுக்கு வாக்களிப்பதற்காக அரைநாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

40 தொடக்கம் 100 கிலோ மீற்றர் தொலைவுக்குள் வாக்களிப்பு நிலையங்கள் காணப்படும் சேவையாளர்களுக்கு முழுநாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

100 தொடக்கம் 150 கிலோ மீற்றர் தொலைவில் வசிப்போருக்கு ஒன்றரை நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தெரிவிப்பட்டுள்ளது.

தொழில் புரியும் இடத்திலிருந்து 150 கிலோ மீற்றருக்கும் அதிக தூரத்தில் வசிக்கும் வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment