இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 4, 2019

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு (05) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்துள்ளதாக வர்த்தக வாணிப அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் (LPG) விலை கொழும்பு மாவட்டத்தில் ரூபா 240 இனாலும், ஏனைய மாவட்டங்களில் ரூபா 251 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அனுமதிக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை ரூபா 1,733 இலிருந்து ரூபா 1,493 ஆக இன்று நள்ளிரவு (05) முதல் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை ரூபா மற்றும் 2.3 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 95 இனாலும் 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 30 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில், 12.5 கிலோ சிலிண்டர் ஒன்று ரூ. 1,733 இலிருந்து ரூ. 1,493 ஆகவும், 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 693 இலிருந்து ரூ. 598 ஆகவும், 2.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ. 319.00 இலிருந்து ரூ. 289 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று நள்ளிரவு முதல் குறித்த விகிதத்தால் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வாணிப அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment