விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தங்களை பிணையில் விடுவிக்கும் உத்தரவை வழங்குமாறு, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெணான்டோ ஆகியோரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீள்பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவின் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தடுக்கத் தவறியதன் மூலம் தமது பணியிலிருந்து அலட்சியமாக செயற்பட்டதன் மூலம் கொலைக் குற்றச்சாட்டில் சிஐடியால் கைது செய்யப்பட்டு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்து தங்களை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவித்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளதோடு அதன் பின்னர் சட்ட மா அதிபரினால் மீள்பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த மீள்பரிசீலனை மனுவை மேல் நீதிமன்றம் தமது பிணையை இரத்துச் செய்து மீண்டும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த உத்தரவில் குறைபாடு உள்ளதாக மனுதார்ரகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்முறையிட்டுள்ளனர்.
அதன்படி, தங்களை பிணையில் விடுவிக்கவும், மேல் நீதிமன்றத்தின் அறிவிப்பை சட்டவிரோதமானது எனவும் தீர்ப்பு வழங்குமாறு அவர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை கேட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டபோது, எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டிருந்தார்.
No comments:
Post a Comment