கொழும்பில் இருந்து எவ்வித மீள் சுழற்சியும் இல்லாமல் புத்தளம் அருவாக்காட்டுக்கு கொண்டுவரும் குப்பை லொறிகளை இன்று மக்கள் இடைமறித்தனர்.
கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டுவதால் சூழல் மாசயடைவதுடன் அங்கிருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கு துர்நாற்றம் வீசுவதினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கொழும்பில் இருந்து எவ்வித மீள் சுழற்சி இன்றி கொண்டு வரப்பட்ட 28 லொறிகளையும் குப்பைகளை கொட்டாமல் திரும்பி அனுப்புவதற்கு மக்கள் முயற்சி செய்தனர்.
இதில் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேரக்ககுளி, கரைத்தீவு, எலுவாங்குளம், கங்கேவாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர்.
வண்ணாத்திவில்லு பிரதேச சபைத் தலைவர் சமந்த முனசிங்க தலைமையில் இன்று அதிகாலை குப்பைகளுடன் வந்த 28 லொறிகளையும் கங்கேவாடி - அருவாக்காடு வீதியில் நிறுத்தி வைத்தனர்.
பின்னர் அங்கு கூடிய மக்கள் குப்பைகளுடன் மீண்டும் செல்லுமாறு தெரிவித்தையடுத்து அங்கிருந்து குப்பை லொறிகள் செல்லும் வழியில் வண்ணாத்திவில்லு பொலிஸார் அதனை தடுத்தி நிறுத்தியதுடன் எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் பேச்சு வாரத்தையில் ஈடுபட்டனர்.
இன்று மட்டும் இந்த குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதி தருமாறும் புத்தளம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்பித்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்காக தெரிவித்ததையடுத்து மக்கள் 11 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் குப்பைகளை அருவாக்காட்டில் கொட்டுவதற்கு இடம் கொடுத்தனர்.
இதன்போது வண்ணாத்திவில்லு பங்கு தந்தை அருட் திரு.கிறிஸ்டி பெரேரா அடிகளார் வண்ணாத்திவில்லு பிரதேச சபை உப தலைவர் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment