இரும்புக் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, September 6, 2019

இரும்புக் கடை உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள இரும்புப் பொருள் விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் வாள் வெட்டில் படுகாயமடைந்ததை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில், உப்புமடம் பகுதியில் உள்ள இரும்புப் பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீதே வாள் வெட்டுக் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்று (06) மாலை 4.00 மணியளவில் குறித்த இரும்புப் பொருள் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த வாள் வெட்டுக் குழு உரிமையாளர் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
 
இதேவேளை, வாள் வெட்டு தாக்குதலை நடத்திய கும்பல் தப்பித்துச் செல்லும் சி.சி.ரி.வி கமெராக் காட்சி பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

No comments:

Post a Comment