நாட்டில் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - News View

About Us

About Us

Breaking

Friday, September 6, 2019

நாட்டில் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நாட்டில் மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீர்வள மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலிப் வேத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இதனூடாக நாட்டின் மீன் தேவைகளை பூர்த்தி செய்ய எதிர்பாரப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

´கடந்த நான்கு வருடங்களாக மீன்வளத்துறை இராஜாங்க அமைச்சராக இருக்கின்றேன். ஆனால் என்னாள் எதனையும் செய்ய முடியவில்லை. இருப்பினும், மீன்வளத்துறை மேம்பாட்டு அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் ஆகியோர் மீனவர்களின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கூறுகின்றனர்.

நான் ஒவ்வொரு மாதமும் இந்த அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தற்போதுள்ள சவால்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுவேன். அது மட்டுமல்லாமல், அந்த முடிவுகளை முறையாக செயல்படுத்த ஒரு பொறிமுறையையும் நான் வைத்துள்ளேன்.

கடந்த அரசாங்க காலத்தில் மீன்பிடித் தொழில் துறையை முன்னெடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. அந்த இருண்ட ஆட்சியின் காரணமாக, மீனவர்கள் சர்வதேச ரீதியில் அடிபாதாளம் வரை கொண்டு செல்லப்பட்டனர். இதன் விளைவாக மீனவ சமூகம் மிகவும் பின்தள்ளப்பட்டு காணப்பட்டது.

ஆனால் நாம் ஆட்சிக்கு வந்ததும் அந்த சர்வதேச கட்டுப்பாடுகளை நீக்க முடிந்துள்ளது. இதன் விளைவாக தற்போது மீனவர்கனின் அறுவடைக்கு நல்ல விலை கிடைத்துள்ளது. மேலும், மீனவர்கள் அறுவடை செய்வதிலும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மீன் ஏற்றுமதியில் இருந்து அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தமையே இதற்கு காரணமாக அமைந்தது. அதிக அறுவடை செய்யப்பட்டால் உள்நாட்டு மக்களின் மீன் நுகர்வுக்கு மீன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், மக்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லை.

எனவே, இந்த சவாலை எதிர்கொள்ள தேவையான செயன்முறையை குறுகிய காலத்தில் சாத்தியமாக்க எதிர்பார்கின்றேன்´ என கடற்றொழில் மற்றும் நீர்வள மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலிப் வேத ஆராச்சி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment