நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா கிழங்கன் பிரதேச வைத்தியசாலையின் காரியாலயத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு ஆண் உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டிக்கோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வைத்திய சான்றுதழை பெறுவதற்கு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது, வைத்தியசாலையின் காரியாலயத்தில் உள்ள உத்தியோகத்தர்களிடம் மருத்துவ சான்றுதழை கோரியுள்ளார். தாங்கள் கோரும் மருத்துவ சான்றுதழை எங்களால் வழங்க முடியாது. இதனை நீங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பெறவேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த நபர் வைத்தியசாலையின் காரியாலயத்தில் இருந்த கதிரைகளை தள்ளிவிட்டு உத்தியோகத்தர்களின் கழுத்து பகுதியினை பிடித்து தாக்க முற்பட்டதாகவும், அவர்களுடைய சேவைக்கு இடையூறு விளைவித்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஒரு உத்தியோகத்தர் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். டிக்கோயா பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(மலையக நிருபர் சதீஸ்குமார்)
No comments:
Post a Comment