அதி உயர் தர முதியோர் இல்லங்கள் மூலம் நல்ல இலாபங்களை ஈட்டமுடியும் - ஆளுநர் முஸம்மில் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

அதி உயர் தர முதியோர் இல்லங்கள் மூலம் நல்ல இலாபங்களை ஈட்டமுடியும் - ஆளுநர் முஸம்மில்

முதியோர் தின நிகழ்வுகளைக் கொண்டாடுவதுதான் நின்றுவிடாது, குறைந்தது 25 முதியவர்களையாவது வருடாந்தம் தம்பதிவ யாத்திரை போன்ற வெளிநாட்டு யாத்திரைகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேல் மாகாண சமூக சேவை திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஆளுநர் ஏ .ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சமூக சேவை திணைக்களம் மற்றும் மேல் மாகாண முதியோர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்த "முதியோர் தின நிகழ்வு இன்று கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல் மாகாண செயலாளர் பிரதீப் யசரத் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர் முதியோர் இல்லம் ஒரு நல்லதொரு வேலைத்திட்டம், வெளிநாடுகளின் பணம் செலுத்தி முதியோர் இல்லங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. தனது பெற்றோரைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாதவிடத்து, பிள்ளைகள் பணம் செலவழித்தாலாவது, பெற்றோரை நல்ல முறையில் பராமரிக்க ஆசைப்படுகின்றனர். அதி உயர் தர முதியோர் இல்லங்கள் மூலம் நல்ல இலாபங்களை ஈட்டமுடியும். 

எமது நாட்டில் கூட பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ளதால் முதியோர்களைப் பராமரிக்க முடியாமலுள்ளது. ஆகவே ஐந்து நச்சத்திர தரமுடைய ஒரு முதியோர் இல்லத்தை எம்மால் உருவாக்க முடியுமாயின், நான் நினைக்கிறேன் பணம் செலுத்தி தனது பெற்றோரைப் பராமரிக்கப் பலர் தயாராகவுள்ளனர். ஆகவே இந்த வேலைத்திட்டம் மேலும் விரிவாக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment