கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் வெளியாகின! - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் வெளியாகின!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

இதனை எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சனா விஜயசேகர இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் 2005 இல் திரும்ப பெறப்பட்ட இரட்டை குடியுரிமை சான்றிதழ் மற்றும் 2019 இல் அமெரிக்க குடியுரிமை இழந்ததற்கான சான்றிதழ் இதில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment