செயலாளர் இல்லாத அமைச்சுக்கு செயலாளர் போன்று யாராலும் கையொப்பம் இடமுடியாது - மஹிந்தவினால் அவரது சகோதரர் கோத்தாவுக்கு போலியாக தயாரித்து வழங்கப்பட்ட ஆவணங்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

செயலாளர் இல்லாத அமைச்சுக்கு செயலாளர் போன்று யாராலும் கையொப்பம் இடமுடியாது - மஹிந்தவினால் அவரது சகோதரர் கோத்தாவுக்கு போலியாக தயாரித்து வழங்கப்பட்ட ஆவணங்கள்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபஷவின் பிரஜாவுரிமைக்கு சவால் விடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள றிட் மனு நாளை 02 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

இதேவேளை கோட்டாபய ராஜபஷவின் தேசிய அடையாள அட்டை, இரட்டைப் பிரஜாவுரிமைச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டுடன் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகள் தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்தது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கோட்டாபய சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, கோட்டாபயவின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுக்கான ஆவணங்களை முன்வைத்தார். 

எனினும் ஆவணங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்பதன் காரணமாக அதனை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென நீதிபதி யசந்த கோட்டாகொட தெரிவித்தார்.

'புரவெசி பலய' அமைப்பின் இணை அழைப்பாளர் காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் கோட்டாபயவின் பிரஜாவுரிமைக்கு சவால் விடுக்கும் வகையில் றிட் மனுவை தாக்கல் செய்திருந்தனர். 

மேலும் கோட்டாபயவின் சர்ச்சைக்குரிய இரட்டைப் பிஜாவுரிமை சான்றிதலை இவ்வழக்கின் ஆறாவது பிரதிவாதியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவே பெற்றுக் கொடுத்ததாகவும் அது சட்டப்படி விநியோகிக்கப்படவில்லையென்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டாபய இலங்கைப் பிர​ஜையென தன்னை அடையாளப்படுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஆர்.எம்.பி.எஸ்.பி ரத்நாயக்க, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.வியானி குணதிலக்க, அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சர் காமினி செனவிரட்ன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ, பதில் பொலிஸ்மா அதிபர் விக்கிரமரட்ன, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்ன, சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேக்கர ஆகியோர் இவ்வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் கோட்டாபய ராஜபஷ சார்பில் ஆஜரான நீதிபதிகளான யசந்த கொடாகொட, அர்ஜூன ஒபேசேகர, ரொமேஷ் டி சில்வா ஆகியோர் இவ்வழக்கு ஒக்டோபர் 2,3 மற்றும் 04 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தனர்.

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 05 ஆம் திகதியன்று வெளியான பத்திரிகையொன்றில் கோட்டாபயவின் பிரஜாவுரிமை மற்றும் அவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளமை தொடர்பில் அறிந்து கொண்டதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அரசியலமைப்பின் 92 மற்றும் 89 (அ) சரத்துக்களுக்கமைய நாட்டின் பிரஜையல்லாத ஒருவர் ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிட முடியாதென்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

கோட்டாபயவின் இரட்டைப் பிரஜாவுரிமை சான்றிதலில் ஜனாதிபதிக்கு மேலதிகமாக செயலாளர் எனும் இடத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளபோதும், 2005 நவம்பர் 18 இற்கும் 2005 நவம்பர் 24 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்ட அமைச்சுக்கு செயலாளர் ஒருவர் இருக்கவில்லை. செயலாளர் இல்லாத ஒரு அமைச்சுக்கு செயலாளர் போன்று யாராலும் கையொப்பம் இடமுடியாது.

இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவினால் அவரது சகோதரருக்காக போலியாக தயாரித்து வழங்கப்பட்டது. எனவே இது சட்டப்படி செல்லுப்படியாகாது என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment