சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70 வது ஆண்டு விழா - மாசேதூங்கின் பதப்படுத்தப்பட்ட உடலுக்கு ஜனாதிபதி மரியாதை - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70 வது ஆண்டு விழா - மாசேதூங்கின் பதப்படுத்தப்பட்ட உடலுக்கு ஜனாதிபதி மரியாதை

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70 ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாசேதூங்கின் பதப்படுத்தப்பட்ட உடலுக்கு ஜனாதிபதி ஜிஜின்பிங் இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

சீனாவில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிச சித்தாந்தம் முறையிலான ஆட்சியை சீனாவில் முதன் முதலில் மாசேதுங் அறிமுகப்படுத்தினார். சீன மக்கள் குடியரசு என்ற பெயரில் கட்சி தொடங்கிய மாசேதுங் 1949 முதல் 1976 வரை 47 ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்தார். 

1976-ம் ஆண்டு மாசேதுங் உயிரிழந்த பின்னர் அவரது உடல் தைலத்தால் பதப்படுத்தப்பட்ட நிலையில் பிஜீங் நகரில் உள்ள டைனமென் சதுக்கத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கம்யூனிச ஆட்சி முறையில் சீனாவில் அறிமும் செய்யப்பட்டதன் 70 வது ஆண்டு விழா அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டைனமென் சதுர்க்கத்தில் வைக்கப்பட்டுள்ள மாசேதுங் உடலுக்கு சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் இன்று மரியாதை செலுத்தினார். ஜனாதிபதியுடன் இணைந்து அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சக அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment