ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா - முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் 5ஆம் திகதி அறிவிப்பார் - News View

About Us

About Us

Breaking

Monday, September 30, 2019

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா - முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் 5ஆம் திகதி அறிவிப்பார்

எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் 5ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் அவரிடம் இது தொடர்பாக இன்று (30.09.2019) கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது முடிவினை அறிவிக்கவுள்ளது.

இந்த நிலையில் நான் தற்போது வெளிநாட்டில் நிற்கின்றேன். நான் நாட்டுக்கு வந்தவுடன் அவசரமாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் புத்திஜீவிகள் பிரமுகர்களுடன் உலமாக்கள் ஆகியோருடன் கலந்துரையாடியதன் பின்னர் எனது முடிவை எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை அறிவிப்பேன்.

யாரை ஆதரிப்பது அல்லது போட்டியிடுவதா என்பன குறித்து எனது கருத்தை அன்றைய தினம் வெளியிடுவேன்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுவதென தீர்மானித்தால் 6ஆம் திகதி கட்டுப்பணத்தினை செலுத்தி 7ஆம் திகதி நியமனப்பத்திரத்தை தாக்கல் செய்வோம். இதுவரை எந்த முடிவுகளையும் தான் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment