மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 28, 2019

மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் முதலாவது கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் அனைத்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களையும் அழைத்து தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தௌிவுபடுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகள், மாவட்ட ரீதியிலான கலந்துரையாடல்கள் மற்றும் மக்கள் சந்திப்புகள் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளதுடன், ஐக்கிய தேசிய முன்னணியும் வேட்பாளரை அறிவிக்கவுள்ள நிலையில் இந்த 2 கட்சிகளுடனும் தொடர்புபடாத அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவாரத்தை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடதுசாரிக் கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நலின்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment