நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி - News View

About Us

About Us

Breaking

Sunday, August 18, 2019

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 268 ஓட்டங்களை போட்டியின் இறுதி நாளான இன்று (18) 4 விக்கெட்டுகளை இழந்து அடைந்ததன் மூலம் இவ்வபார வெற்றியை அது ஈட்டியுள்ளது.

இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக, அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ஆகக் கூடுதலாக 122 ஓட்டங்களையும், லஹிரு திரிமான்ன 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்ததோடு, இருவரும் இணைந்து 161 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கியிருந்தனர்.

நியூசிலாந்து அணி சார்பில் ட்ரண்ட் போல்ட், ரிம் சௌதி, வில்லியம் சொமர்வில்லே, அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இப்போட்டியில் தனது 9 ஆவது சதத்தை பூர்த்தி செய்த திமுத் கருணாரத்ன, போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

அதற்கமைய 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றதோடு, பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து 18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 285 ஓட்டங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெற்றி இலக்காக 268 ஓட்டங்களை முன்னிறுத்தி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து அதனை அடைந்தது.

1 ஆவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 249/10 (83.2)
ரொஸ் டெய்லர் 86 (132)
ஹென்ரி நிகொல்ஸ் 42 (78)
டொம் லதம் 30 (88)

அகில தனஞ்சய 5/80 (30.0)
சுரங்க லக்மால் 4/29 (15.2)

இலங்கை 267/10 (93.2)
நிரோஷன் திக்வெல்ல 61 (109)
குசல் மெண்டிஸ் 53 (89)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 50 (98)

அஜாஸ் பட்டேல் 5/89 (33.0)
வில்லியம் சொமர்வில்லே 3/83 (22.2)
ட்ரண்ட் போல்ட் 2/45 (20.0)

2 ஆவது இன்னிங்ஸ்
நியூசிலாந்து 285/10 (106.0)
பி ஜே வொட்லிங் 77 (173)
டொம் லதம் 45 (81)
வில்லியம் சொமர்வில்லே 40 (118)

லசித் எம்புல்தெனிய 4/99 (37.0)
தனஞ்சய டி சில்வா 3/25 (12.0)
லஹிரு குமார 2/31 (10.0)

இலங்கை 268/4 (86.1)
திமுத் கருணாரத்ன 122 (243)
லஹிரு திரிமான்ன 64 (163)

ரிம் சௌதி 1/33 (12.0)
ட்ரண்ட் போல்ட் 1/34 (9.1)
வில்லியம் சொமர்வில்லே 1/73 (31.0)
அக்ஷர் பட்டேல் 1/74 (18.0)

வெற்றி இலக்கு: 268
போட்டியின் நாயகன்: திமுத் கருணாரத்ன

No comments:

Post a Comment