உலக நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்திலேயே வெற்றி தங்கியுள்ளது - இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

உலக நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்திலேயே வெற்றி தங்கியுள்ளது - இராணுவத் தளபதி

நாடுகளுக்கிடையில் தகவல் பரிமாற்றம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை நம்புவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஒருவருக்கொருவர் சிறந்த தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பதிலே வெற்றி தங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை இராணுவம் வருடாந்தம் நடத்திவரும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற இந்த மாநாட்டின் நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்தும் போதே இராணுவத் தள பதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இராணுவத் தளபதி மேலும் உரையாற்றுகையில் கொழும்பு பாதுகாப்பு மாநாடானது எமது அனுபவத்தை மாத்திரமின்றி எமது வெற்றி தோல்வி இரண்டு தொடர்பிலும் கலந்துரையாடும் பொருட்டே தயாரிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று பல்லின சமூகத்திற்கு மத்தியில் படையினரை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பது தொடர்பிலும் கவணம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். எதிர்காலத்தில் இராணுவம் மேலும் நவீனமயப்படத்தப்பட வேண்டும் என்றும் அதன் முக்கியத்துவம் தற்பொழுது உணரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“சமகால பாதுகாப்பு சூழலில் மாறிவரம் இராணுவத்தின் சிறப்பியழ்பு” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றுவரும் 2019ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் மாகாண ஆளுநர்கள், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல்த சில்வா, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸதானிகர்கள், தூதரக பாதுகாப்பு இணைப்பாளர்கள், வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்ப துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment