“மெஹெவர பியச” கட்டிடத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 20, 2019

“மெஹெவர பியச” கட்டிடத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி

நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினருக்கு சிறந்த சேவையை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில் திணைக்களத்தின் “மெஹெவர பியச” கட்டிடத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (20) முற்பகல் திறந்து வைத்தார்.

2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக 8,500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 

தற்போது அரசாங்கத்திற்கு சொந்தமான பாரிய மற்றும் உயர்ந்த கட்டிடமாகவுள்ள இக்கட்டிடம் 32 மாடிகளையும் நவீன வசதிகளையும் கொண்டுள்ளது.

தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்பன இங்கு தமது சேவைகளை வழங்கி வருவதுடன், இலங்கை மத்திய வங்கி மற்றும் இறைவரித் திணைக்களத்தின் சில பிரிவுகளும் 05 மாடிகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடத்தையும் பொதுமக்களுக்கான பொது வசதிகளையும் இந்த கட்டிடம் கொண்டுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான ரவீந்திர சமரவீர, வடிவேல் சுரேஷ், தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment